
வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக திகழ்கிறது. தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
’மக்களின் உடல்நலம் பாதிக்கும் செயலில் இந்த புனித நகரம் ஒரு போதும் ஈடுபடாது’ என்று வாடிகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிகரெட் காரணமாக வருடத்துக்கு 70 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 2015-ம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்றில் வாடிகனில் வருடத்துக்கு ரூ.72 கோடி மதிப்பில் சிகரெட் விற்பனை நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.