Published : 17,Feb 2017 08:53 AM

பர்த் டே கிஃப்ட்டாக வெளிவந்த வேலைக்காரன்

siva-karthikeyan-new-movie-tittle-released

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை எடுத்துரைக்கும் வகையில் உருவான புதுப்படத்திற்கு வேலைக்காரன் என பெயரிடப்பட்டுள்ளதாக 24 ஏஎம் ஸ்டியோஸ் தெரிவித்துள்ளது.

மோகன் ராஜாவின் தனி ஒருவன் ஹிட் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில் உருவான புதிய படத்திற்கு வேலைக்காரன் என பெயரிட்டுள்ளனர். சிவாவின் பிறந்த நாளான இன்று படத்தின் தலைப்பை பரிசாக வெளியிடபட்டுள்ளனர் படக்குழுவினர். ரெமோ படத்தைத் தயாரித்த 24 ஏஎம் ஸ்டியோஸ் ராஜாதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். மே 1 ஆம் தேதி வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என 24 ஏஎம் ஸ்டியோஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரஜினியின் படபெயரான வேலைக்காரன் படத்தை சிவகார்த்திகேயன் படத்திற்கும் வைத்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்