Published : 10,Nov 2017 05:48 AM

திருமண தேதியை அறிவித்தார் நடிகை நமீதா

actress-namitha-announced-marriage-date

நடிகை நமீதாவுக்கும் அவரது நண்பரும் காதலருமான வீராவுக்கும் நவம்பர் 24-ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

'மச்சான்' என்ற மந்திர வார்த்தையால் தமிழ் மக்களின் உள்ளம் தொட்டவர் நமீதா. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்த 'எங்கள் அண்ணா' என்ற திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நமீதாவை இன்றுவரை அவரது ரசிகர்கள் கொண்டாடித்தான் வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதால் அவரின் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் கூடியது.

இந்நிலையில் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக நமீதா தெரிவித்துள்ளார். பிக்பாஸில் மற்றொரு போட்டியாளராக பங்கேற்ற ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நமீதா, ரைசா இருவரும் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் நமீதா தனது வருங்கால கணவரான வீராவை அறிமுகம் செய்து வைத்ததோடு, நவம்பர் 24-ஆம் தேதி தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு என்றும் தேவை என்றும் நமீதா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்