சோதனைக்குள்ளான முக்கிய இடங்கள் என்னென்ன?

சோதனைக்குள்ளான முக்கிய இடங்கள் என்னென்ன?
சோதனைக்குள்ளான முக்கிய இடங்கள் என்னென்ன?

சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
6 வருமானவரித்துறை ஆணையர்கள் தலைமையில், 1800 அதிகாரிகள் 187 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் திருமணத்திற்கு செல்வது போல் மாற்று உடைகளில் சென்றுள்ளனர்.
சோதனை நடைபெறும் முக்கிய இடங்கள்:

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகங்கள் 

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு எஸ்டேட் 

ஜெயா தொலைக்காட்சியின் உயர் மட்ட நிர்வாகிகளின் வீடுகள் 

சென்னையை அடுத்த படப்பையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை மற்றும் காகித ஆலை 

புதுச்சேரி அருகே அரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு

தஞ்சாவூரில் உள்ள  ம.நடராஜன் வீடு

சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ்

பெங்களூருவில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீடு 

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனின் சென்னை அடையாறு நேருநகர் வீடு

மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தயார் கலைக் கல்லூரி

திருத்துறைப்பூண்டியில் உள்ள திவாகரன் நண்பரான ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநர் நடேசன் வீடு

தஞ்சையில் சசிகலா அண்ணன் வினோதகனின் மகன் தங்கமணி வீடு

மன்னார்குடி அருகே ரிஷியூர் பகுதியில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான பண்ணை வீடு

ரிஷியூர் பகுதியில் உள்ள திவாகரன் நண்பர் தமிழ்ச்செல்வன் வீடு

தினகரனின் சகலையும், ஜெயலலிதாவின் மருத்துவராகவும் இருந்த சிவக்குமார் வீட்டில் பூட்டை உடைத்து சோதனை

திருச்சி ராஜா காலனியில் உள்ள சிவக்குமார் இல்லம்

நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வழக்கறிஞர் பாலுச்சாமி வீடு

கோடநாடு எஸ்டேட் கணக்கை பராமரித்துவரும் வங்கி

மன்னார்குடியில் தினகரன் அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வீடு

திவாகரன் ஆதரவாளர்கள் வடுவூர் அக்ரி, ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் உள்ளிட்டோர் வீடுகள்

திருவாரூர் கீழதிருப்பாலக்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு

மன்னார்குடியில் திவாகரன் உதவியாளரான முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீடு

சென்னையில் உள்ள திவாகரன் வீடு

திருவாரூர்: மன்னார்குடி சுந்தரகோட்டையில் உள்ள திவாகரன் வீடு

திவாகரன் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அன்புச்செல்வி வீடு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com