[X] Close

திருமணத்திற்கு செல்வது போன்று சென்று ரெய்டு நடத்திய அதிகாரிகள்..!

Income-tax-raid-in-above-150-places

சசிகலாவின் உறவினர்கள் இல்லங்களில் நடைபெறும் சோதனை குறித்த தகவல் முன்கூட்டியே வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வருமான வரித்துறையினர் வாடகை கார்களில் சென்றுள்ளனர்.


Advertisement

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 150 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை குறித்த தகவல் முன்கூட்டியே வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வருமான வரித்துறையினர், வாடகை கார்களில் சென்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு செல்வது போன்ற ஸ்டிக்கர் ஓட்டிய கார்களில் அதிகாரிகள் சோதனைக்காக சென்றுள்ளனர். இதற்காக ஏற்கனவே அவர்கள் வாடகை டாக்சிக்களையும் முன்பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. 150-க்கும் அதிகமான இடங்களுக்கும் திருமணத்திற்கு செல்வது போன்று ஸ்டிக்கர் ஒட்டிய வாடகை கார்களிலேயே சென்று அவர்கள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close