சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய்

சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய்
சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய்

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து  வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் கடந்த சில வாரங்களுக்கு முன் ரூ.80 முதல் 100 வரை விற்பனையான சிறிய வெங்காயம், இன்று கிடுகிடுவென உயர்ந்து ஒருமூட்டை ரூ. 9000-க்கும், கிலோ ரூ.150- க்கு விற்பனையாகிறது. 

இதனால் வியாபாரிகளும், இல்லத்தரசிகளும் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறிய வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். தின மற்றும் வாரச்சந்தைகளில் உள்ள சிறு வியாபாரிகளிடம் வரும் வாடிக்கையாளர்கள் சிறிய வெங்காயத்தின் விலையை கேட்டு, 150 என்றவுடன் வாங்காமல் திரும்பி செல்கின்றனர். 

மேலும் கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150க்கு விற்பனையாவதால், பெரும்பாலான விவசாயிகள் சிறிய வெங்காயம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com