Published : 09,Nov 2017 02:09 AM

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற வேண்டும்: பார் கவுன்சில் அதிரடி

TamilNadu-and-Pudhucherry--Bar-Council

அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெறாத 1,025 பேர் வழக்கறிஞராக பணி செய்யக் கூடாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கறிஞராக பதிவு செய்த இரண்டு ஆண்டுகளில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என விதி உள்ளதும், தேர்ச்சி பெறும் வரை நீதிமன்றத்திலோ, தீர்ப்பாயத்திலோ வழக்கறிஞராக பணியாற்றக் கூடாது என்ற விதி உள்ளதும் நினைவுப்படுத்தப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு முதல் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருவதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெறாமல் இனியும் வழக்கறிஞராக பணியாற்றினால், பார் கவுன்சில் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து எந்த அறிவிப்பும் இன்றி நீக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்