நாகையில் மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் சில கிராமங்கள் தனித்தீவாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வண்டல், குண்டூரான்வெளி மற்றும் அவுரிக்காடு கிராமங்கள் மழைநீர் சூழ்ந்து தனித்தீவாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கனமழை காரணமாக அடப்பாறு, நல்லாறு ஆகிய ஆறுகளில் வரும் மழைநீரால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் படகில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து கூறும் கிராம மக்கள், தங்கள் பகுதியில் உள்ள அடப்பாற்றைக் கடந்து செல்ல கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவும், ஆனால் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் புகார் கூறுகின்றனர். எனவே, வண்டல், அவுரிக்காடு இணைப்புப் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்