[X] Close

சோளக்காட்டில் தொலைந்த 81 வயது மூதாட்டி: ஆளில்லா விமானம் மூலம் கண்டுபிடிப்பு

America-old-lady-missing-and-Found

அமெரிக்காவில் வழிதெரியாமல் சோளக் காட்டுக்கு‌ள் காணாமல் போன 81 வயது மூதாட்டியை ஆளில்லா விமானம் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் 81 வயது மூதாட்டி ஒருவர் வழிதெரியாமல் சோளக்காட்டுக்குள் சென்று தொலைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூதாட்டியை தேடிய காவல்துறையினர், ஆளில்லா விமானம் மூலம் 25 நிமிடத்தில் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா காவல்துறையினர் பொதுவாக குற்றச் செயல்களைக் கண்டறிய மட்டுமே ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்துவர். தற்போது காணாமல் போன 81 வயது மூதாட்டிக்காக ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன் சோளக்காட்டில் காணாமல் போன மூதாட்டி, தன்னை மீட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close