பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காங்கிரஸ் கட்சியினர் பிச்சைக்காரர்கள் போல் வேடமணிந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தி‌ல் ஈடுபட்டனர். 

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்த நாளை  எதிர்கட்சிகள் பலர் கறு‌ப்பு தினமாக அனுசரித்து பலவிதமான போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் ஒருவிதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் குளச்சல் பகுதியில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கறுப்பு உடை அ‌ணிந்து திருவோடு‌ ஏந்தி வீடுகள் மற்றும்  கடைகளில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் இந்த நூதனப் போராட்டத்தை ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com