கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.
சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்றார். வருமானத்திற்கு அதிகமான பணம் இருக்குமேயானல் அதுகுறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். இதில் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்றும் கூறினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முதலில் நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். பின்னர் பணமதிப்புழப்பு நடவடிக்கைக்கு அவசரப்பட்டு ஆதரவு தெரிவித்துவிட்டதாக கமல்ஹாசன் பகிரங்கமாக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide