[X] Close

'இரும்புத் திரை'யில் இணையும் பாடலாசிரியர் விவேக்..!

Lyricist-Vivek-next-with-Yuvan-shankar-Raja

மெர்சல் திரைப்படத்திற்கு பின் விஷாலின் 'இரும்புத் திரை' படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுகிறார்.

தமிழ் சினிமாவின் இளம் பாடலாசிரியராக உருவெடுத்துள்ளார் விவேக். "வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோமா".. "அடியே அழகே.. என் அழகே அடியே" என்ற இவரின் வரிகள் இப்போதைய இளசுகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. அண்மையில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தில் இவர்'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடலை எழுதியிருந்தார். 'ஆளப்போறான் தமிழன்' இணையதளத்தில் வைரலாகியதோடு பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. இந்நிலையில் மெர்சல் திரைப்படத்திற்கு அடுத்ததாக விஷாலின் "இரும்புத் திரை"  படத்திற்கு விவேக் பாடல் எழுதுகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை மித்ரன் இயக்குகிறார்.


Advertisement

Advertisement
[X] Close