[X] Close

தமிழக அரசு மீது விஜயகாந்த் கடும் தாக்கு

Vijayakanth-alleged-tn-government

தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கோரியிருப்பது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அல்ல... தங்களுக்காக என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார்.


Advertisement

சென்னை பள்ளிக்கரணை அருகே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் நாராயணபுரம் ஏரியையும் மனைவி பிரேமலதா மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல் கட்சி தொடங்குவதை வரவேற்பதாகவும், அவர் கட்சி தொடங்கிய பின்னர் கூட்டணி குறித்து முடிவு ‌எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழக அரசு 1500 கோடி ரூபாய் கோரியிருப்பது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அல்ல என்றும் அது தங்களுக்காகத் தான் என்றும் சாடினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு நிதி ஒதுக்கவில்லை எனவும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close