Published : 07,Nov 2017 02:59 PM
காற்று மாசால் கலங்கியது டெல்லி

டெல்லியில், காற்றில் உள்ள மாசின் அளவு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது, கட்டுமான பணிகள், வாகன போக்குவரத்து ஆகியவற்றின் காரணமாக காற்றில் மிக மோசமான அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்காலம் தொடங்கியதும் காற்றின் வேகம் குறைந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே டெல்லியில் சுகாதார அவசர நிலையை பிறப்பிக்குமாறு அரசுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில், அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் ஒற்றைபடை மற்றும் இரட்டை படை கார்களுக்கான திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது.