
மீனவர்களுக்கான சேமிப்பு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவ சங்க அலுவலகத்தில் மீனவப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட படகு உரிமையாளர்களின் அவசர ஆலேசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசால் விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் சேமிப்பு நிவாரண நிதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மீன் வளத்துறை அதிகாரி மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.