[X] Close

வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீருக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே காரணம்: விவசாயிகள் புகார்

In-the-stagnant-rain-water-due-to-the-company-ONGC-fields--Farmers-complain

வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியாமல்‌ இருப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே‌ காரணம் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. பைங்காட்‌டூர், வாட்டார், ஓரத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வடிகாலாக அமைந்துள்ளது கவரன் வாய்க்கால். இந்த கவரன் வாய்க்கால் பாய்கின்ற பகுதிகளில் 5 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி பிளாண்ட் போட்டுள்ளனர். இதற்கு வாகனங்கள் வந்து செல்வதற்காக சாலை போடும்போது‌ கவரன் வாய்க்காலில் சிறு குழாய்களை மட்டுமே பதித்துள்ளனர். இதனால் விளைநிலங்களில் தேங்கி ‌நிற்கும் மழைதண்ணீரை வேகமாக வெளியேற்ற வழியில்லாமல் ‌அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close