Published : 16,Feb 2017 01:28 PM

பன்னீர்செல்வம் இல்லம் அருகே கைகலப்பு

admk-partys-clash-at-ops-home

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் அருகே அவரின் ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லம் அருகே சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வாக்குவாதத்தின் போது சில அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, சொந்த கட்சிகாரர்களையே தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்