[X] Close

மழை எதிரொலி: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Rain-in-TamilNadu-Schools-Leave-for-7-Districts

தமிழகத்தில் மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து
வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் என தெரியவருகிறது.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close