[X] Close

பாஜக அரசை ட்விட்டரில் விமர்சித்த ராகுல் காந்தி, ப.சிதம்பரம்

Deliver-Or-Quit--Says-Rahul-Gandhi-In-Tweet-Attack-On-PM-Modi

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மத்திய பாஜக அரசை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.


Advertisement

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விண்ணைத் தொடும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வேலை வாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் வெற்றுப் பேச்சுகளைப் பேசி என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் பக்கத்தில், வாரணாசி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் பாரதிய ஜனதாவின் இளைஞர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.‌ பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை சிறு தொழில்களை முடக்கியதாகவும் அதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை எனவும் சிதம்பரம் சாடியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close