
ஓஎன்ஜிசி குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் வாய்காலில் உடைப்பு ஏற்ப்பட்டு பயிற்கள் நீரில் மூழ்கியதாக திருவாரூர் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வடுகக்குடியில் உள்ள பருத்தியூர் வடிகால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 100 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், சில ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிவதற்கு முன்பு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ஓஎன்ஜிசி குழாய் பதிப்புப் பணிகள் நடைபெற்ற போது தோண்டிய பகுதிகளை சரிவர மூடாததே, வாய்க்கால் உடைப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.