Published : 05,Nov 2017 02:04 PM
ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்ற விஜயகாந்த்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாட்டு வண்டியில் பயணம் செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், தாம் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன், விவசாயத்திற்காக குரல் கொடுப்பேன். தமிழகத்தில் தோற்றுப்போன ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்று கூறினார்.