Published : 05,Nov 2017 10:10 AM
அதிமுக எம்எல்ஏவை முற்றுகையிட்ட மீனவர்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மழைநீர்வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அதிமுக எம்எல்ஏவை மீனவ மக்கள் முற்றுகையிட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைகோடி மீனவ கிராமமான பூம்புகார் பகுதியில் ஆறுகள் மற்றும் வாய்கால்கள் மூலம் மழைநீர் கடலில் கலக்கிறது. இந்நிலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் தொடர்மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் மூன்று நாட்கள் கழித்து தான் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்தார். அப்போது, ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்பட்டும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கடும் வாக்குவாதத்தில் மக்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து எம்எல்ஏ உடனே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.