[X] Close

மழையைப் பயன்படுத்தி பட்டப்பகலில் கொள்ளை

Chennai-Heavy-Rain-Theft

சென்னை சூளைமேட்டில் மழை நேரத்தை பயன்படுத்தி ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனா; மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஊடகத்துறையை சேர்ந்த ஒருவரின் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த கொள்ளையன், மழை பெய்துகொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி பட்டப் பகலிலேயே கொள்ளையடித்துள்ளான். மூன்றே முக்கால் சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற காட்சி, எதிரே உள்ள கட்டடத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement

Advertisement
[X] Close