விருதுநகரில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது 12 வயது மகன் நந்தகுமார். இவர் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய வளாகத்தில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திறந்த நிலையில் இருந்த மின்சாதனத்தின் வயர் சிறுவன் மீது பட்டதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து சிறுவனை விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரியத்தின் அலட்சியத்தாலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்