
விராத் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அவருக்கு கேக் அபிஷேகம் செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இன்று 29 வது பிறந்த நாள். இதையடுத்து முந்நாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அணி வீரர்களுடன் விராத் கோலி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அவர் முகம் மற்றும் உடலில் கேக்கை பூசி அபிஷேகம் செய்தனர். இந்தப் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.