[X] Close

தமிழகத்தில் 200 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Chennai-Omanthur-Govt-Hospital-Function

மழையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படாமல் தடுக்க 200 நடமாடும் மருத்துவக் குழுக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு மருத்துவக் குழுவிலும் மருத்துவர், செவிலியர், உதவியாளர்கள் இருப்பார்கள் என்றும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருக்கும் என்றும் அந்தந்தப் பகுதிகளுக்கே சென்று மழையால் பாதிக்கப்பட்டு நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மக்களின் நலன் கருதி ஏற்கனவே 400 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 200 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தமாக 600 மருத்துவக் குழுக்கள் பணியில் உள்ளதாகக் கூறினார். மேலும் சித்த மருத்துவர்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பதாகவும், சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுதல்களையும் தெரிவித்தார். மேலும், பாதுகாப்பான குடிநீர், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close