Published : 04,Nov 2017 03:31 PM
காங்கிரஸ் தன் பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கிறது: மோடி விமர்சனம்

காங்கிரஸ் தன் பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச தேர்தலையொட்டி பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர், ”காங்கிரஸ், தான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகள் நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்கவும்,எனது உருவப் பொம்மையை எரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். நான் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சீடர் என்பதையும் ஒருபோதும் பதற்றமடைய மாட்டேன் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.” என குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.