Published : 04,Nov 2017 02:43 PM
தல 58 படத்திற்கு யுவன் இசையா?

தல 58 படத்திற்கு யுவன் இசையமைக்க இருப்பதாக ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
இவரது இசையில் ஏற்கெனவே வெளியான மங்காத்தா பெரிய அளவுக்கு பேசப்பட்டது. இந்தப் படம் ப்ளாக் பாஸ்டர் ஹிட் என ரெக்கார்ட் பிரேக் செய்தது. இதில் யுவனின் தீம் மியூசிக் செம மாஸாக இருந்ததை கொண்டாடித் தீர்த்தார்கள் அஜித் ரசிகர்கள். இந்த நிலையில் அஜித்தின் 58 வது படத்தை மீண்டும் சிவாவே இயக்குகிறார். அவர் தரப்பில் இருந்தோ, யுவன் தரப்பில் இருந்தோ இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இன்று ட்விட்டரில் தல 58 இசை யுவன் என்ற தகவல் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தக் கொண்டாடத்தை கவனித்து ஒருவேளை படக்குழு யுவனையே இசையமைக்க வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.