Published : 04,Nov 2017 11:24 AM

காம்பீர் வீட்டில் சுரேஷ் ரெய்னா: ஃபேமிலி மீட்டிங்!

Suresh-Raina-family-Chill-Out-With-Gambhir-And-Family

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் வீட்டுக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா குடும்பத்துடன் சென்றார்.

இந்திய அணியில் இடம் கிடைக்க போராடி வரும் சுரேஷ் ரெய்னா, இப்போது ரஞ்சி போட்டியில் உத்தர பிரதேசத்துக்காக விளையாடி வருகிறார். டெல்லியில் போட்டி நடந்த போது கவுதம் காம்பீர் வீட்டுக்குச் சென்றார். தனது மனைவி பிரியங்கா, ஒரு வயது குழந்தை கிரேஸியாவையும் அங்கு அழைத்துச் சென்றார். கவுதம், அவர் மனைவி நடஷா ஆகியோர் ரெய்னா குடும்பத்தை வரவேற்றனர். கவுதமுக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அனைஷா என்று பெயர் வைத்துள்ளனர். முதல் பெண் குழந்தை ஆஜீனையும் அனைஷாவையும் வாழ்த்திய சுரேஷ் ரெய்னா ஜோடிக்கு கவுதம் காம்பீர் வீட்டில் சிறப்பு விருந்து வைக்கப்பட்டது. பின்னர் தங்கள் பழைய நினைவுகளில் இருவரும் மூழ்கினர். இந்தப் புகைப்படங்களை சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்