
என்னிடம் உள்ள 5 லட்சம் பேரை அனுப்புகிறேன், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை செப்பணிட அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று விவசாயிகள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் விவசாயிகள் கூட்டத்தில் பேசிய கமல், “விவசாயிகளுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன். அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி. எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். என்னுடன் நான் சொல்வதையெல்லாம் செய்வதற்கு 37 வருடமாக இளைய பருவத்தில் இருந்து 5 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குழு குழு பிரிந்து உங்களை சந்திக்க வந்தே தீர்வார்கள். அவர்களிடன் அறிவுசார்ந்த சிலர் வருவார்கள். ஏரிகள், குளங்களை செப்பணிட என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்யுங்கள். உங்களுக்கு நான் ஆள் அனுப்புகிறேன் என்று சொல்லவில்லை. உங்கள் கூட்டமே பெரியது தான். இது ஒரு சிறிய உதவி தான்” என்றார்.