Published : 04,Nov 2017 05:30 AM

டென்னிஸ் வீராங்கனை ஓஸ்னியாக்கி திருமண நிச்சயதார்த்தம்!

Tennis-star-Caroline-Wozniacki-announces-engagement

டென்னிஸ் வீராங்கனை கரோலின் ஓஸ்னியாக்கி, அமெரிக்கக் கூடைப்பந்து வீரரை திருமணம் செய்ய இருக்கிறார்.

டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை கரோலின் ஓஸ்னியாக்கி. தரவரிசையில் மூன்றாம் நிலை வீரரான இவர், அமெரிக்க கூடைப் பந்து வீரர் டேவிட் லீயை காதலித்து வந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்தம் நேற்று முடிந்துள்ளது. நிச்சயதார்த்த மோதிரத்தின் படத்தை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார் ஓஸ்னியாக்கி.
‘திருமணத்துக்கு ஓ.கே. சொல்லிவிட்டார் கரோலின். த்ரில்லிங்காக உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார் டேவிட் லீ.

27 வயதான ஓஸ்னிக்கி, ஏற்கனவே கோல்ப் சூப்பர் ஸ்டார் ரோரி மேக்ராயை காதலித்து வந்தார். திருமணம் வரை சென்ற இவர்கள் காதல், பின்னர் முறிந்தது. இதையடுத்து டேவிட் லீயை காதலித்தார் .
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்