[X] Close

துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 3 பதக்கம் வென்றது இந்தியா  

Shooter-competition--3-medal-wins-India

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்களே 3 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் பிரகாஷ் நஞ்சப்பா 222.4 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். அதே போட்டியில் பங்குப்பெற்ற இந்திய வீரர்களான அமன்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கமும், ஜீது ராய் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 3 பதக்கங்களையும் சொந்தமாக்கிய இந்திய வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதே போல் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் இந்திய வீரர்களே 3 பதக்கங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்களுக்கான டபுள் டிராப் போட்டியில் இந்திய வீரங்கனை ஸ்ரேயாசி சிங் வெள்ளி பதக்கம் வென்றார்.   


Advertisement

Advertisement
[X] Close