[X] Close

பருவமழை பாதிப்பு: மாவட்டந்தோறும் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

Heavyrain-In-TamilNadu--CM-Alerts-District-Collector

வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் மூத்த ‌ஐஏஎஸ் அதிகாரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு கடலோர மாவட்டங்களில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு அமைச்சர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தெருவோர மின்பகிர்மான பெட்டிகளை உயரத்தில் அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் விரைவாக வெளியேறாத பகுதிகளை கண்டறிந்து கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி நீரை விரைவாக வெளியேற்றவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி, தொற்றுநோய் ஏற்படாதபடி அந்தப் பகுதிகளை சுத்தப்படுத்தி ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கவும் அதிகாரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close