
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.
புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சென்னையை அடுத்த பெரும்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அவரது புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடராஜனின் உடல்நிலை மோசமானதால் அவரை கவனிக்க சசிகலா பரோலில் 5 நாட்கள் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.