ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக திமுக மருத்துவர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை சென்னையில் உள்ள எழிலகத்தில் இருந்து மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி, இதுதொடர்பான ஆவணங்களை தபால் மூலமும், மனுக்களை விசாரணை ஆணையத்திடமும் ஒப்படைக்கலாம் என தெரிவித்திருந்தார். இதையடுத்து 15க்கும் மேற்பட்ட தபால்கள் விசாரணை ஆணையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக திமுக நிர்வாகி சரவணன் விசாரணை ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். எனவே விசாரணை ஆணையத்தில் வேறு மாநில மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் பாலாஜியின் பெயர் இல்லை என்றும், 4 தொகுதி தேர்தலுக்கு 20 கைரேகைகள் மட்டுமே பெற வேண்டிய சூழலில், 28 கைரேகைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போலோ செய்திக்குறிப்புக்கும், மருத்துவ அறிக்கைக்கும் முரண்பாடுகள் அதிகம் உள்ளன என்றும் சரவணன் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்