Published : 02,Nov 2017 07:13 AM
10 வருடம் சிறையில் இருந்த இந்தியர் மீண்டும் கைது!

10 வருட சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த இந்தியர், அமெரிக்காவில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் ஜெரால்டு பீட்டர் டிசோசா (58). இந்தியரான இவர், 13 வயது சிறுமியை இணையதளம் மூலம் பாலியல் குற்றத்துக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். பத்துவருட சிறைத் தண்டனை கிடைத்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், தண்டனை முடிந்து வெளியே வந்தார். ஆனால், அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.