கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடர்களே என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உருவானதன் 62வது ஆண்டில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பேசினார். அப்போது, கர்நாடகாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். கர்நாடகாவில் வசிப்போர் அனைவரும் கன்னடத்தை கற்றுக்கொள்வதோடு தங்களது குழந்தைகளுக்கும் கன்னடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடர்களே என தெரிவித்தார்.
தாம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் அல்ல எனக் குறிப்பிட்ட சித்தராமையா, கர்நாடகாவில் இருந்து கொண்டே அம்மொழியை கற்காவிட்டால் அது கன்னடத்திற்கு செய்யும் அவமரியாதை என்றார். கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு கன்னடமொழி தெரியவில்லை எனில், அவர்களுக்கு மாநிலத்தில் பணியாற்ற இடமில்லை என சித்தராமையா கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பேசியுள்ளார்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!