[X] Close

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கியது மழை

Heavy-Rains-in-Chennai-Today

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. சென்னையில் நேற்று பகல் நேரத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில், இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. ராயபுரம், தண்டையார்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

வடசென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டுக்கல், கரூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இதனிடையே, தமிழகம் முழுவதும் பரவலாக 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close