Published : 31,Oct 2017 02:01 PM
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மருத்துவக் கழிவுகள் அகற்றம்

புதிய தலைமுறை செய்தியின் எதிரொலியாக கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனை அருகே கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் அகற்றப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள பகுதியில் மருத்துவகழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு மக்கள் அவதியடைந்தனர். அத்துடன் அரசு மருத்துவமனை முன்பு கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறி வந்தனர்.
இது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக அங்கு கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் அகற்றப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.