[X] Close

3வது நாளாக கடலுக்குச் செல்லாத நாகை மீனவர்கள்

Nagai-fishermen-can-t-go-into-the-ocean-for-fishing

கடல் சீற்றத்தின் காரணமாக நாகை மீனவர்கள் மூன்று நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


Advertisement

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் பலத்த காற்று வீசுவதால் மூன்றாவது நாளாக 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், போன்ற பத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியாமல் உள்ளனர். இதனால் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 இரண்டு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல், அவர்கள் வருமானம் முடங்கியுள்ளது. அத்துடன் கடலின் சீற்றம் குறைந்தால் மட்டுமே மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close