மறுபடியும் தான் நடிக்க வருவதாக அதிகாரப்பூர்வமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகை நஸ்ரியா அறிவித்திருக்கிறார்.
ராஜா ராணி, நேரம், திருமணம் எனும் நிஹ்கா போன்ற சில படங்களில்தான் நஸ்ரியா நடித்திருந்தார். ஆனால் அளவு கடந்த ரசிகர்களால் அவர் விரும்பப்பட்டார். பெரிய அளவுக்கு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வந்த வேகத்திலேயே குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்தார். ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இனி நடிக்கமாட்டார் என பேச்சு அடிப்பட்டது. அத்துடன் திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்கள். அப்போதும் நஸ்ரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கடுமையான உடற்பயிற்சிக்குப் பின் பழைய நஸ்ரியாவாக திரும்பினார். அவருக்கு நடிப்பதற்கான சரியான தருணமாக அதுவே அமைந்தது.
இந்நிலையில் அவர் மறுபடியும் நடிக்க இருப்பதாக ஒரு தகவலை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில், “பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தது முதலே ‘உங்க அடுத்த படம் எது?’ என எல்லோரும் கேட்பார்கள். அதற்கான பதில் இதோ. மீண்டும் நடிக்க வருகிறேன். ப்ரிதிவிராஜ், பார்வதி நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன். அந்தப் படத்தை அஞ்சலி மேனன் இயக்குகிறார். அவருக்கு என் அன்பு” என பதிவிட்டிருக்கிறார்.
நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில் தமிழில் ‘வேலைக்காரன்’ மூலம் வில்லனாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'