[X] Close

பருவமழையை எதிர்கொள்ள அமெரிக்காவை விட சிறந்த நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி

S-P--Velumani-about-heavy-rain-Defense

அமெரிக்கா, இங்கிலாந்தை விட சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

பருவமழை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, பருவமழையை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, “பருவமழையை பொருத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் போன்ற பாதிக்கக்கூடிய மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தியும், அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களிலும் மோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பெங்களூருவை விட சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள அரசு சிறப்பான நவடிக்கையை எடுத்துள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னை மாநகராட்சியில் தூர்வாரும் பணிகள் 95 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கிய 49 இடங்களிலும் நீர் அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் 22 சுரங்கப்பாதைகளிலும் நீரை அகற்றுவதற்கான இயந்திரங்கள் தயாராக உள்ளது. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டைப் பெற்றது. அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் விமர்சிப்பதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார்” என தெரிவித்தார்.  
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close