[X] Close

அடையாற்றில் தொடர்ந்து உயரும் நீர்மட்டம்: கரையோர மக்கள் அச்சம்

Water-Level-increased-in-Adayar-River

மழையின் காரணமாக சென்னை அடையாற்றில் படிப்படியாக வெள்ளம் அதிகரித்து வருகிறது. இதனால் கரையோர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அடையாற்றில் படிப்படியாக வெள்ளம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் அதிகப் பாதிப்புக்கு உள்ளான சைதாப்பேட்டை ஆடு தொட்டிப் பாலம் அருகே ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. கரையோரத்தில் உள்ள குடிசை வீடுகளை ஒட்டியே ஆற்றுநீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இதனிடையே இதுவரை தங்களுக்கு எந்தவிதமான வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது ஏற்பட்ட நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close