[X] Close

திமுக, அதிமுக சரித்திரம் முடிந்தது : பொன்.ராதாகிருஷ்ணன்

The-chapter-of-ADMK--DMK-has-ended-in-Tamil-Nadu--says-Pon-Radhakrishnan

திமுக, அதிமுக-வின் சரித்திரம் முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆரால் துவக்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுகவும், அண்ணாவால் தொடங்கப்பட்டு கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட திமுக-வும் தற்போது முடிந்து போய்விட்டதாக தெரிவித்தார்.

கழகங்களின் சரித்திரம் முடிந்துபோய் தற்போது தமிழகத்தில் புதிய தேடல்கள் ஆரம்பித்துவிட்டதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஊழலுக்கு எடுத்துக்காட்டாக திமுக, அதிமுக-வை தவிர எந்தக்கட்சியையும் கூற முடியாது எனவும் அவர் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close