சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் அச்சம்

சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் அச்சம்
சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் அச்சம்

கோவையில் மக்கள் நடமாடும் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். 

கோவை மாவட்டம் மருதமலைப் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள்ம் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி முன், காட்டு யானை மதநீர் வழிந்த நிலையில் முகாமிட்டுள்ளது தெரியவந்தது. தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர். அவ்வழியாக வாகன போக்குவரத்து குறைவு என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று வனத்திறையினர் தெரிவித்துள்ளனர். கோவை காட்டு பகுதியில் இருக்கும் யானைகள் அவ்வப்போது மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வந்து அச்சுறுத்துவது தொடர் கதையாக மாறி வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com