பயம் கூட போதை போன்றது: நடிகர் சித்தார்த்

பயம் கூட போதை போன்றது: நடிகர் சித்தார்த்
பயம் கூட போதை போன்றது: நடிகர் சித்தார்த்

பயம் கூட போதையை போன்றதுதான் என்று நடிகர் சித்தார்த் கூறியிருக்கிறார்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘அவள்’. இந்தப் படம் குறித்து பேசிய நடிகர் சித்தார்த், “ஒரு நல்ல பேய் படத்தைப் பார்ப்பது என்பது நமக்கு ஸ்பாவுக்கு போவதை போன்ற அனுபவத்தை கொடுப்பது. அதனால் ஒரு புதிய புத்துணர்ச்சி கிடைக்கும். ஐந்து வயதில் அம்மா எனக்கு திரைப்படங்களை அறிமுகப்படுத்தினார். என் பத்து வயதில் நான் பேய் படங்களை பார்க்க தொடங்கினேன். ‘அவள்’ படத்தில் ஒரு ஜோக்கை கூட நாங்கள் வைக்கவில்லை. பயம் கூட ஒரு போதையை போன்றதுதான். எனக்குப் பயப்பட பிடிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவள் படத்தின் கதையை நடிகர் சித்தார்த்தும் இயக்குநர் மிலிந்த் ராவும் இணைந்து நான்கு ஆண்டுகளாக எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மணிரத்னத்திடம் வேலை பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com