Published : 15,Feb 2017 07:22 AM
எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஸ்டாலின் மறுப்பு

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பேதும் விடுக்கவில்லை என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சென்னை வரவேண்டும் என்று அக்கட்சியின் கொறடா சக்ரபாணி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக செய்தி வெளியானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.