Published : 30,Oct 2017 08:31 AM

ஆசஷ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஆஸி பயணம்

Ashes-2017--If-Ben-Stokes-is-missing-England-must-stick-together-in-Australia

ஆசஷ் டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் நவம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் நகரில் நவம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது. ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதபோதிலும் இங்கிலாந்து அணி வலிமையுடன் இருப்பதாக ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நைட் கிளப்பில் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்