[X] Close

5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Chance-for-Heavy-Rain-in-Next-Five-days

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலையிலிருந்து விட்டு விட்டு பெய்த மழை இன்று காலை வெளுத்து வாங்கியது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதுமட்டுமின்றி புதுச்சேரி, கடலூர், நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை, கன்னியாகுமரியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close