[X] Close

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை

Pasumpon-Devar-Memorial-Stalin-respected

முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். 

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், அங்கு வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் திரளாக வந்திருந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியினர் திரளானோர் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close